சிவஞானம் ஒரு சீசன் வியாபாரி-சிவகரன் பகிரங்க குற்றச்சாட்டு(காணொளி)
சீ.வி.கே சிவஞானம் ஒரு சீசன் வியாபாரி பதவி ஆசைபிடித்து திரிகின்றார். அவர் தமிழ்தேசிய அரசியல் கோட்பாட்டிலிருந்து வந்தவரல்ல என்றும் அவைத்தலைவர் பதவி ஆசைபிடித்து தானே முதல்வருக்கு எதிராக செயற்படுவதாக குற்றம் சாட்டிய சிவகரன், தனக்கு தானே மண்ணை அள்ளி போட்டுக்கொண்டுள்ளார் மாவை எனவும் அடிப்படை கட்சி கட்டமைப்போடு இருந்த தமிழரசு கட்சியை அழித்து சின்னாபின்னமாக்கிய பெருமை மாவை சேனாதிராயாவையே சாரும் எனவும் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதேவேளை தற்போதைய நிலைபற்றி பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனிடம் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் கேள்வி கேட்டபோது இந்திய துணைத்தூதரும் அருகில் இருந்தபோதும் சிறிதரன் பதில் கூறாது சென்றமை குறிப்பிடத்தக்கது.
தலைவர் பிரபாகரனுக்கு சினமூட்டிய அந்தப் பெயர் சிவஞானம் என்பதையும் இங்கு சுட்டிக்காட்டுகின்றோம் இது பற்றி மறைந்த தேசத்தின் குரல் பாலசிங்கம் அவர்கள் தனது போரும் சமாதானமும் என் நூலிலும் சுட்டிக்காட்டியிருந்தார்.
முழுமையாக இவரது திருகுதாளங்களை அறியாமல் இரண்டாவது தெரிவாக இவரது பெயரை இணைத்துவிட்டார்கள். தலைவர் பிரபாகரனின் தெரிவாக பத்மநாதன் என்பவரே இருந்ததால் அவரது பெயர் முதற்தெரிவாகவும் அனுப்பப்பட்டிருந்தது.
ஆனால் நரித்தனத்தில் வல்லவரான அன்றைய ஜனாதிபதி ஜயவர்த்தனா இரண்டாவது தெரிவாக இருந்த சிவஞானம் தனக்கு பொருத்தமானவர் என்பதை கண்டு அவரை தெரிவுசெய்தார்.
தொடர்புடைய முன்னைய செய்திகள்
விக்கியை வீழ்த்தினால் அமைச்சு பதவி-சிங்கள உறுப்பினர்களுடன் பேரம்(காணொளி)
விக்கினேஸ்வரனை மாற்றுவதற்கு மூன்று திட்டங்கள்-சுமந்திரனணி விளக்கம்(காணொளி)
விக்கினேஸ்வரனை மாற்றுவதற்கு மூன்று திட்டங்கள்-சுமந்திரனணி விளக்கம்(காணொளி)
முதல்ரிவரின் “வலக்கையை உடைக்க வேண்டும்” சுமந்திரன் போட்ட சதித்திட்டம் அம்பலம்!!
முதலமைச்சரை கருணாவுடன் ஒப்பிடும் சிறிதரன்
இலங்கைக்கு எதிராக எந்த தீர்மானமும் வேண்டாம்-சுமந்திரன்(காணொளி)
 



 
 
 
 
 
 







