முதலமைச்சரை பதவி நீக்க முற்பட்டால் மாகாண சபை முடக்கப்படும் - THAMILKINGDOM முதலமைச்சரை பதவி நீக்க முற்பட்டால் மாகாண சபை முடக்கப்படும் - THAMILKINGDOM

 • Latest News

  முதலமைச்சரை பதவி நீக்க முற்பட்டால் மாகாண சபை முடக்கப்படும்

  வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை
  முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதற்கு தமிழரசுக் கட்சி தொடர்ந்தும் முயற்சி செய்யுமாயின் வடக்கு மாகாண சபையை முழுமையாக முடக்குவதற்கு இளைஞர் அணி தயாராக இருப்பதாக தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.

  வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையை தமிழரசுக் கட்சி வடக்கின் ஆளுநரிடம் கையளித்ததை வன்மையாகக் கண்டித்தும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை வாபஸ் பெறுமாறு வலியுறுத்தியும் நேற்று முன்தினம் வட மாகாணம் முழுவதிலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டதுடன் அன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான மக்கள் அணி திரண்டு முதலமைச்சர் விக் னேஸ்வரனுக்கு தங்களின் ஆதரவைத் தெரிவித்திருந்தனர்.

  இந்நிலையிலும் தமிழரசுக் கட்சி புதிய முதலமைச்சரை தெரிவு செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருப்பதான தகவலை அக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர்.
  இந்நிலையில் பாரிய மக்கள் அணிதிரண்டு கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபையை தொடர்ச்சியாக முடக்கவும் தமிழரசுக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வட மாகாணத்துக்குச் செல்லும் இடமெங்கும் எதிர்ப்பு ஆர்ப் பாட்டங்களைத் தெரிவித்து சம்பந்தப்பட்ட நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

  இதேவேளை இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அகிம்சை வழியில், ஜனநாயக முறையில், பாதுகாப்புச் சட்டங்களை அனுசரித்து நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் குறித்த இளைஞர் அணி மேற் கொண்டு வருவதாகவும் தெரியவருகிறது.

  தொடர்புடைய முன்னைய காணொளிகள்


  தலைவர் பிரபாகரனுக்கு சினமூட்டிய அந்தப் பெயர் சிவஞானம் என்பதையும் இங்கு சுட்டிக்காட்டுகின்றோம் இது பற்றி மறைந்த தேசத்தின் குரல் பாலசிங்கம் அவர்கள் தனது போரும் சமாதானமும் என் நூலிலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

  முழுமையாக இவரது திருகுதாளங்களை அறியாமல் இரண்டாவது தெரிவாக இவரது பெயரை இணைத்துவிட்டார்கள். தலைவர் பிரபாகரனின் தெரிவாக பத்மநாதன் என்பவரே இருந்ததால் அவரது பெயர் முதற்தெரிவாகவும் அனுப்பப்பட்டிருந்தது.

  ஆனால் நரித்தனத்தில் வல்லவரான அன்றைய ஜனாதிபதி ஜயவர்த்தனா இரண்டாவது தெரிவாக இருந்த சிவஞானம் தனக்கு பொருத்தமானவர் என்பதை கண்டு அவரை தெரிவுசெய்தார்.


  தொடர்புடைய முன்னைய செய்திகள்


  முதல்ரிவரின் “வலக்கையை உடைக்க வேண்டும்” சுமந்திரன் போட்ட சதித்திட்டம் அம்பலம்!!

  முதலமைச்சரை கருணாவுடன் ஒப்பிடும் சிறிதரன்

  இனவழிப்பு நடைபெற்றதற்கான ஆதாரம் இல்லை-சுமந்திரன்(காணொளி)

  இலங்கைக்கு எதிராக எந்த தீர்மானமும் வேண்டாம்-சுமந்திரன்(காணொளி)


  முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: முதலமைச்சரை பதவி நீக்க முற்பட்டால் மாகாண சபை முடக்கப்படும் Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top