Breaking News

கல்வி அமைச்சராக ஆனல்ட் :சுமந்திரன் முடிவு-இணங்குவாரா விக்கி


வடமாகாண கல்வி அமைச்சராக இதுவரைகாலமும்
முதலமைச்சருக்கு எதிராக குடச்சல் கொடுத்துவந்த சுமந்திரன் அணியின் முக்கிய உறுப்பினரும் மைத்திரிவீட்டில் நத்தார் விருந்துண்டவருமான ஆனல்ட் அவர்களை நியமிப்பதற்கு சுமந்திரன் தலைமையில் கூடிய தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட அணியினர் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.

யாழ்.நகரின் கூவத்தூர் விடுதி என அழைக்கப்படும் இலங்கைத் தமிழரசுக் கட்சி காரியாலயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தலைமையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா, சி.சிறிதரன், ஈ.சரவணபவன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் 15 பேர்களுக்குமிடையில் புதிய கல்வி அமைச்சர் நியமனம் தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராசா தனது பதவியை இராஜினாமா செய்ததனைத் தொடர்ந்து அந்த வெற்றிடத்திற்கு இம்மானுவேல் ஆனோல்டை கிளிநொச்சி மாவட்ட மாகாண சபை உறுப்பினர் பா.அரியரட்ணம் அவர்கள் முன்மொழிய தமிழரசுக் கட்சியின் ஏனைய மாகாண சபை உறுப்பினர்கள் ஏக மனதாக ஏற்றுக்கொண்டதாகவும் தமிழரசுகட்சி உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நியமிக்க தெரிவுசெய்யப்பட்ட ஆனல்ட் என்பவர் சுமந்திரனால் வடமாகாணசபையில் முதல்வருக்கு எதிராக கழமிறக்கப்பட்டிருந்த நால்வரில் ஒருவராகவும் யு.எஸ். விடுதியில் திட்டங்கள் தீட்டுவதில் வல்லவராகவும் கடந்த நத்தார் தினத்திற்கு மைத்திரி வீட்டிற்கு அழைத்து மைத்திரியால் நத்தார் விருந்து வழங்கப்பட்ட உறுப்பினரும் என்பதையும் தமிழ்கிங்டம் இங்கு சுட்டிக்காட்டுகின்றது.

அண்மையில் வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கும் சந்திப்பொன்று தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றதும் அதற்கு அடுத்தநாள் முதலமைச்சர் தமிழரசுகட்சியின் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் காட்டமான அறிக்கை வெளியிட்டும் இருந்த நிலையில் முதலமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கும் முகமாகவே தமிழரசுக்கட்சி தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரியவருகின்றது.

ஏற்கனவே அமைச்சர்களாக இருக்கும் சத்தியலிங்கம் தமிழரசுக்கட்சியை சேர்ந்தவராகவும் ரெலோவைச் சேர்ந்த அமைச்சரான பா.டெனீஸ்வரன் ரெலோவின் கொள்கைகளை புறந்தள்ளி தமிழரசுபக்கம் போனதாலும் தமிழரசு கட்சி அமைச்சர்களாகவே இருவரும் கடமையாற்றிவரும் நிலையில் மேலும் வடமாகாணசபையின் குழப்பங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிவரும் ஆனொல்டும் நியமிக்கப்பட்டால் வடமாகாணசபையில் தமிழரசுக்கட்சி மூன்று அமைச்சுக்களை கொண்டிருக்கும் என்றும் ஏனைய ஒருவரை முதலமைச்சர் நியமித்தாலும் அவரால் எதுவும் செய்யமுடியாது.

அதாவது வடமாகாணசபை தொடர்பாக அமைச்சுவாரிய முடிவுகளில் முதலமைச்சர் என்ன செய்தாலும் அதனை குழப்புவதற்கு ஏதுவாக நான்குபேரில் மூவரை தமிழரசுக்கட்சி எடுப்பதன் மூலமாக தொடர்ந்தும் முதலமைச்சரை சீண்டிப்பார்ப்பதிலேயே சுமந்திரன் தரப்பு ஈடுபட்டுவருவதாகவே கருதப்படுகின்றது.

கல்வி அமைச்சை தாம் தெரிவு செய்வதாக தெரிவித்துள்ள தமிழரசு தரப்பு வேண்டுமானால் விவசாய அமைச்சை முதல்வர் தெரிவு செய்யட்டும் எனக்கூறிவருவதாகவும் ஆனால் இதற்கு முதலமைச்சர் இசைந்து கொடுப்பாரா அல்லது வடமாகாணசபையை குழப்பி முதல்வரை தொடர்ந்தும் நெருக்கடி நிலையில் வைத்திருப்பதன் ஊடாக அவரை அரசியல் வாழ்விலிருந்து ஒதுங்கச்செய்யும் ஒரு ஏற்பாடா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நேற்று முன்தினம் முதலமைச்சர் தொடர்பாக சுமந்திரன் தெரிவித்த கருத்து


தொடர்புடைய முன்னைய காணொளிகள்

முதல்ரிவரின் “வலக்கையை உடைக்க வேண்டும்” சுமந்திரன் போட்ட சதித்திட்டம் அம்பலம்!!

முதலமைச்சரை கருணாவுடன் ஒப்பிடும் சிறிதரன்

இனவழிப்பு நடைபெற்றதற்கான ஆதாரம் இல்லை-சுமந்திரன்(காணொளி)

இலங்கைக்கு எதிராக எந்த தீர்மானமும் வேண்டாம்-சுமந்திரன்(காணொளி)


முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்