Breaking News

சுமந்திரனின் தந்தைக்கு புலிகள் பச்சைமட்டை அடி கொடுத்தது ஏன்?

சுமந்திரனது தந்தை (ஆபிரஹாம்) விடுதலைபுலிகள்
மின்கம்பத்தில் கட்டி வைத்து நையப்புடைத்த செய்தி தற்போது வெளியாகியுள்ளது.  இந்த சம்பவம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் இருந்தபோது இடம்பெற்றுள்ளதாக அவரது நண்பர் ஒருவர் தெரியப்படுத்தியுள்ளார்.

சுமந்திரனது தந்தை (ஆபிரஹாம்) விடுதலைபுலிகள் மின்கம்பத்தில் கட்டி வைத்து நையப்புடைத்ததன் பின்னர் அவர்கள் குடும்பமாக வடமராச்சியை விட்டு வெளியேறி கொழும்புக்கு சென்று வாழ ஆரம்பித்ததாகவும் தெரிவித்துள்ளார். அதிலிருந்தே விடுதலைப்புலிகளையும் விடுதலைப்போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் செயற்பாட்டில் சுமந்திரன் தீவிரமாக செயற்பட ஆரம்பித்ததாகவும் தெரியவருகின்றது.

80ம் ஆண்டு ஆரம்பத்தில், அரியாலை காசிப்பிள்ளை வாசிகசாலைக்கு பக்கத்தில, புங்கன்குளம் சந்தி புகையிரதநிலையத்திற்கு முன்பாக எத்தனை பேருக்கு உந்த நையப்புடைப்புக்களும், மரணதண்டனைகளும் வழங்கப்பட்டது என்று யாரிடமாவது எண்ணுக்கணக்கு இருக்குமோ தெரியாது. சில நேரங்களில் ஒரே நாளில் இரண்டு மூன்று பேருக்கும் பக்கத்து பக்கத்துக்கு சந்திகளில் “தீர்ப்பு” வழங்கப்பட்டிருக்கும்.

கடைசியாக எனக்குத் தெரிய அரியாலைப்பகுதியில்; ஒருவரை தபாற்கட்டை சந்தியில் கிளைமோர், வயர்கள் உடன் ஒருவரை உயிருடன் கட்டினவர்கள். காலவோட்டத்தில் அந்த நடைமுறைகள் இல்லாமல் போய்விட்டது. ஆனால் அவர்களின் பிள்ளைகள், உறவினர்களுக்கு அத்தகைய தண்டனைகள் ஏற்படுத்திய இழப்புகள் இலகுவில் மறக்கக்கூடியவை அல்ல. அவர்களின் மனத்தில் இவை எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும் என்று எல்லோருக்கும் தெரியப்போவதில்லை.

நான் எனது தொழில் முறையால் இத்தகைய பலரை சந்தித்து இருக்கிறேன். அதைவிட பொதுவில், எனக்கு தெரிந்த (சில) சென்ஜோன்ஸ் பாடசாலை நண்பர்களிடமும் இருக்கிறது.

புலிகளைப்பற்றி, தமிழர் போராடடம் பற்றி ஆர்வமாக கதைப்பார்கள், ஆனால் அதிபர் ஆனந்தராசா பற்றி கதை வந்தால் முகம் இறுக்கமாகிவிடும். இதே போல இதே நிலைமை, மத்திய கல்லூரி மாணவர்களிடமும் உண்டு, அது எங்களின் அதிபர் ராஜதுரை பற்றி; மருத்துவ பீடத்திலும் உண்டு அது வைத்தியர் ரஜனி திரணகமவை பற்றி.

ஆனால், இனம் என்று நாங்கள் கருதும்போது தனிப்பட்ட இழப்புக்கள், விருப்பு-வெறுப்புக்களை தாண்டி செயற்பட வேண்டும். சுமந்திரனின் முடிவுகள், அவரது ஆழ்மன விரோதங்களின், பிறழ் மனநிலைகளின் வெளிப்பாடாக இருக்கும் படச்சத்தில் அவர் அந்த பொறுப்பில் இருந்து விலகவேண்டும். தனிமனிதர்களின் தவறுகள், இழப்புக்கள் ஒரு இனத்தின் இருப்புக்கு முடிவு எழுதக்கூடாது.

-கனகலிங்கம் கிரிஸ்ணகோபால்-











தொடர்புடைய முன்னைய செய்திகள்





ஆலோல்ட்டை அமைச்சராக்க முடியாது -முதலமைச்சர் அதிரடி


சிறிதரனால் பொலீசில் காட்டிக்கொடுக்கப்பட்டவர்கள்(விபரம் உள்ளே)


விக்கியை இப்படியே விட்டால் நிலமை மோசமாகும்-சுமந்திரன்(காணொளி)

கல்வி அமைச்சராக ஆனல்ட் :சுமந்திரன் முடிவு-இணங்குவாரா விக்கி

மைத்திரி வீட்டில் நத்தார் கொண்டாடிய வடமாகாணசபை உறுப்பினர் யார்?

என்னால் உத்தரவாதம் தரமுடியாது-சம்பந்தன் விடாப்பிடி(கடிதம் உள்ளே)

முதலமைச்சரை பதவி நீக்க முற்பட்டால் மாகாண சபை முடக்கப்படும்

முதல்ரிவரின் “வலக்கையை உடைக்க வேண்டும்” சுமந்திரன் போட்ட சதித்திட்டம் அம்பலம்!!

முதலமைச்சரை கருணாவுடன் ஒப்பிடும் சிறிதரன்

இனவழிப்பு நடைபெற்றதற்கான ஆதாரம் இல்லை-சுமந்திரன்(காணொளி)

இலங்கைக்கு எதிராக எந்த தீர்மானமும் வேண்டாம்-சுமந்திரன்(காணொளி)






முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்