Breaking News

கல்வியமைச்சராக சர்வேஸ்! அனந்தி புனர்வாழ்வு மீள்குடியேற்றம் கூட்டுறவு அமைச்சர்!

அமைச்சரவை குழப்பங்களை தீர்க்கும் முகமாக
சர்வேஸ்வரன் கல்வி விளையாட்டு பண்பாட்டு அலுவல்கள் அமைச்சர்ராகவும் அனந்தி சசிதரன் புனர்வாழ்வு மீள்குடியேற்றம் சமூகசேவைகள் மகளீர் விவகாரம் மற்றும் கூட்டுறவு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டு ஆளுனருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சு அலுவலகத்திலிருந்து தெரியவருகின்றது.

விவசாயம் மற்றும் கால்நடை அமைச்சு தொடர்ந்தும் முதல்வரிடமே இருக்கும் என தெரியவருகிறது. இதுதொடர்பில் முதலமைச்சர் ஆளுனருக்கு இன்று சிபாரிசுகளை வழங்கியுள்ளதாகவும் நாளை காலை 10 மணிக்கு பதவி ஏற்பு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்றுமாலை முதலமைச்சர் ஆதரவு அணி மாகாணசபை உறுப்பினர்களை முதலமைச்சர் சந்திக்க உள்ளதாகவும் தெரியவருகின்றது. அமைச்சு விடயங்களை உறுப்பினர்களோடு முதலமைச்சர் ஆராய்வார் என்றும் இந்த நியமனத்திற்கு தொடர்ந்தும் தமிழரசுக்கட்சி குழப்பம் விழைவிக்க முயன்றார் அடுத்தகட்ட நகர்வு எப்படி அமையவேண்டும் என்பதுதொடர்பாகவும் ஆராயப்படவுள்ளது.

அனுபவம் வாய்ந்த பலர் இருக்க தமிழரசுக்கட்சி ஆனொல்டை கல்வி அமைச்சராக்க சிபார்சு செய்திருந்த நிலையில் முதலமைச்சரினை பதவி கவிழ்க்க எடுக்கப்பட்ட முயற்சியினை முறியடிக்க தன்னுடன் நின்ற உறுப்பினர்களில் இருந்து அமைச்சர்களை தெரிவு செய்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் ஆளும் கட்சியில் முதல்வர் அணி தனியாக செயற்படுமென்றே அறியமுடிகின்றது. இருப்பினும் அடுத்த சபை அமர்வில் சுமந்திரன் தரப்பு வழமைபோலவே பல குழப்பங்களை விழைவிக்க காத்திருப்பதாகவே கூவத்தூர் விடுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய முன்னைய காணொளிகள்





தொடர்புடைய முன்னைய செய்திகள்



ஆலோல்ட்டை அமைச்சராக்க முடியாது -முதலமைச்சர் அதிரடி


சிறிதரனால் பொலீசில் காட்டிக்கொடுக்கப்பட்டவர்கள்(விபரம் உள்ளே)


விக்கியை இப்படியே விட்டால் நிலமை மோசமாகும்-சுமந்திரன்(காணொளி)

கல்வி அமைச்சராக ஆனல்ட் :சுமந்திரன் முடிவு-இணங்குவாரா விக்கி

மைத்திரி வீட்டில் நத்தார் கொண்டாடிய வடமாகாணசபை உறுப்பினர் யார்?

என்னால் உத்தரவாதம் தரமுடியாது-சம்பந்தன் விடாப்பிடி(கடிதம் உள்ளே)

முதலமைச்சரை பதவி நீக்க முற்பட்டால் மாகாண சபை முடக்கப்படும்

முதல்ரிவரின் “வலக்கையை உடைக்க வேண்டும்” சுமந்திரன் போட்ட சதித்திட்டம் அம்பலம்!!

முதலமைச்சரை கருணாவுடன் ஒப்பிடும் சிறிதரன்

இனவழிப்பு நடைபெற்றதற்கான ஆதாரம் இல்லை-சுமந்திரன்(காணொளி)

இலங்கைக்கு எதிராக எந்த தீர்மானமும் வேண்டாம்-சுமந்திரன்(காணொளி)






முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்