Breaking News

பாலியல் குற்றவாளிக்கு பட்டாடை போர்த்திய பத்திரிகையாளர்கள்

தமிழர் வரலாற்றுவெளியில் படைப்பாளிகளின் வகிபாகம்
என்பது சங்ககாலம் தொடக்கம் இற்றைகாலம் வரை ஆட்சியிலுள்ளோரின் அல்லது அதன் அடிவருடிகளை சந்தோசப்படுத்தும் அல்லது சமாளிக்கும் போக்குடனே வெளிப்பட்டிருக்கிறது. ஆனால் குறிப்பாக ஈழத்தமிழரின் படைப்புக்களம் என்பது சற்று வித்தியாசப்பட்டு மக்கள் மயப்பட்ட படைப்புகளிற்கு அதிலும் களத்தில் வெளிவந்த படைப்புகளுக்கு அதிக கவனிப்பை பெற்றவையாக இருந்தது.

ஆனால் ஆயுத ரீதியான விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர், அந்த இடைவெளியில் நல்லவற்றை தளுவிக்கொள்வதற்கு பதிலாக வல்லனவற்றை தக்கவைத்துக்கொள்ள இந்த படைப்பாளிகள் வட்டத்தின் ஒரு பிரிவினர் துடிக்கின்றார்கள்.
அதாவது, இத்தகைய படைப்புவட்டத்தின் ஒரு கூறான ஊடகவியலாளர்கள் என்றும் பத்திரிகையாளர்கள் என்று கதைவிடும் சிலரின் சின்னத்தனங்களை வெளிக்கொண்டுவருவதே இப்பத்தியின் நோக்கமாகும்.
ஊடகங்கள் எனப்படுபவை நேர்மையுடன் செய்திகளை முன்னே கொண்டுவருவதுடன் மக்களுக்கான சரியான தகவல்களை முன்னே கொண்டுவருவதும் முக்கியமாக கொள்ளவேண்டும்.
சரியா தவறா என ஆய்வுசெய்துகொண்டிருக்காமல் அவற்றை அப்படியே உள்வாங்கிக் கொள்ளும் வாசகர் வட்டம் என்பதே மிக அதிகமானதாகும். எனவே அதன் உண்மைத்தன்மை அவசியமானது.
அத்தோடு செய்திகளை படைப்புகளை வெளியே கொண்டுவருபவர்கள் தன்னளவில் சுயஒழுக்கம் உடையவர்களாக இருக்கவேண்டும். ஏனெனில் சுயஒழுக்கம் அற்றவர்களின் செயற்பாடுகளே, பாதிக்கப்பட்ட தரப்பின் குரலை மலினப்படுத்திவிடும் ஆபத்தை கொண்டவையாக இருக்கும் என்பது வெள்ளிடை மலை.
இந்தவகையில் தான் அண்மையில் ஊடகவிற்பன்னர்கள் எனக் கூறிக்கொள்பவர்களால் வெளியிடப்பட்ட ஒரு புத்தகம் பற்றியும் அதன் பின்னனியையும் உங்கள் முன்கொண்டுவர விரும்புகின்றோம்.
அவுஸ்திரேலியாவில் அகதிதஞ்சம் பெற்ற ஒருவர், அங்குள்ள அகதிகள் தடுப்புமுகாம் ஒன்றின் பாதுகாப்பு அலுவலகராக பணியாற்றியபோது பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார்.
கடமையில் இருந்தபோது தனது அதிகாரத்தை பிரயோகித்து அகதி தஞ்சம் கோரிய பெண் மீது தனது பாலியல் சேட்டைகளாக கைவிரித்துள்ளார் அவர். அத்தோடு அவரோடு வேலைசெய்யும் இன்னொரு பெண் அலுவலகரோடும் இத்தகைய சேட்டைகளில் ஈடுபட்டதாக குற்றசாட்டு உண்டு.
எனவே இவரை உடனடியாக வேலையிருந்து நீக்கிய அந்நிறுவனம், இவர் மீது வழக்கு தொடுத்தது.
இவர் மீதான 13 குற்றசாட்டுகளில் சாட்சியத்துடன் நிரூபிக்கப்பட்ட குற்றசாட்டுக்காக, ஒரு மாதம் சிறைத்தண்டனையும் “பாலியல் தாக்குதலாளி கோப்பிலும்” (Sex Offender List) இவரை பதிவு செய்து இவரை கண்காணிப்பில் வைத்திருக்குமாறும், நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சிறைத்தண்டனை முடிந்து வெளியே வந்தவுடன், தனது தவறை உணர்ந்து திருந்தி நடந்திருந்தால் அவர் மீதான விமர்சனங்களை பொதுவெளியில் முன்வைக்கவேண்டிய அவசியமில்லை. அப்படி முன்வைப்பது அவர் திருந்துவதற்கான சந்தர்ப்பத்தை வழங்காது. முக்கியமாக அவரைச் சார்ந்தவர்களை குடும்பத்தவர்களை அது பாதிக்கும்.
ஆனால் அவரோ தன்மீதான குற்றசாட்டுக்களையும் தண்டனையும் மறைக்கும் நோக்குடன் “தமிழர்களின் அரசியல் செல்நெறி எப்படி இருக்கவேண்டும்” என்ற தலைப்பில் புத்தக வெளியீடு ஒன்றை தனது நண்பர்கள் மூலம் பொதுவெளியில் செய்துமுடித்து அந்நாட்டின் நீதித்துறைக்கு சவால் விடுத்ததுடன், தமிழ் மக்களின் அரசியல் களத்தையும் நகைப்பிற்குரிய விடயமாக்கியிருக்கிறார்.
இவ்வெளியீட்டை முன்னெடுத்திருந்த எழுத்தாளர் கருணாகரன் இதுபற்றி தெரிவிக்கையில் “எங்கள் வீட்டில் ஒரு பெண்பிள்ளை தவறு செய்தால் இப்படி புறக்கணிப்போமா? எனவே அவரை தட்டிக்கொடுக்கவேண்டும்” என தெரிவிக்கின்றார்.
இங்குதான் கருணாகரன் போன்ற எழுத்தாளர்கள் எப்படி நுணுக்கமான அரசியலை தங்களை சார்ந்தவர்களுக்கு, சேவகம் செய்வதற்காக செய்கின்றார்கள் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
தவறான வழியில் செல்பவர்களை நெறிப்படுத்துவதற்கு பதிலாக அதே நிலையை பேணுவதன் ஊடாக தமது நுண்ணரசியலுக்கு கடை விரிக்கிறார் அவர்.
இதில் பங்குகொண்ட ஊடக பிதாமகன் எனச் சொல்லிக்கொள்ளும் வித்தியாதரன் இவ்வருட ஆரம்பத்தில் “சுற்றுச்சூழலை பாதுகாப்பாக வைத்திருத்தல்” என்ற தலைப்பில் சொன்ட் SOND நிறுவனத்தால் ஒரு கலந்துரையாடல் ஒன்றில் பங்குகொண்டிருந்தார். இது ஊடகர்களுக்கு மட்டுமாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
அதில் உரையாற்றிய அவர் “ஊடகர்கள் எப்படி சூழலை பாதுகாப்பற்றதாக்குகிறார்கள்” என புதிய விடயம் ஒன்றை போட்டுடைத்தார். அது “தடுப்புமுகாம் ஒன்றில் வேலைசெய்த தனது முன்னாள் ஊடகர் மாட்டுப்பட்டு நிக்கிறார்” என்பதாகும்.
ஆனால் அதே வித்தியாதரன் இந்த புத்தக வெளியீட்டு நிகழ்வில் பேசும்போது “புத்தக எழுத்தாளர் சுமந்திரனின் ஆட்கள் என சொல்லுகின்றார்கள். ஆனால் அவர் “கங்காருகளிடம் அகப்பட்ட சுமந்திரன்” என ஒரேயொரு கட்டுரை மட்டுமே அப்படி எழுதினார். அதனை வைத்து அவரை அப்படி கணிப்பிடமுடியாது. அந்தக்கட்டுரையும் இப்புத்தகத்தில் வரவில்லை எனச் சொல்லி பாலியல் குற்றத்தை அப்படியே மறைத்து, தனது வித்துவத்தை மட்டுமே புலம்பினார்.
அங்கு உரையாற்றிய இன்னொருவர் திருச்சிற்றம்பலம் பரந்தாமன். இவர் எழுதிய தொடர் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டதன் காரணமாக, விடுதலைப்புலிகளின் ஊடகமாக கருதப்பட்ட ஒரு இணையத்தளம் இழுத்து மூடப்படவேண்டிய நிலை 2009 இன் பிற்பகுதியில் ஏற்பட்டது.
ஆனால் அதன் பின்னர் பல முற்போக்கான கட்டுரைகளை கொழும்பு பத்திரிகைகளில் எழுதி வந்தவர் அவர்.
அவர் இப்போது தமிழ் மக்கள் பேரவையினருடன் இணைந்து செயற்படுகின்றார். ஆனால் இவ்விடயம் சம்பந்தமாக குறிப்பிடும்போது “அவரது தனிப்பட்ட பலவீனங்கள் தொடர்பாக தனக்கு பிரச்சனை இல்லை என்றும் பல்வேறு தரப்பினருடனும் தொடர்புகளை பேணலாம் என்பதால் இதில் கலந்துகொள்வதாகவும்” தெரிவிக்கின்றார்.
இதன் மூலம், தான் சார்ந்த தமிழ் மக்கள் பேரவையை சார்ந்தவர்களின் சுயஒழுக்கத்தின் மீதும் தேவையற்ற விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கின்றார்.
அடுத்தாக தமிழ் மிரர் பிரதம ஆசிரியர் ஏபி மதனும் இதில் கலந்துகொண்டிருந்தார். இவருடைய முன்னைய புத்தகத்தை நல்லாட்சியின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டு வைத்திருந்தார்.
அவர் தனதுரையில் 2008 இல் சிங்களவனின் கடைக்கு சென்று வடை சாப்பிட்டால் அவனது பொருளாதாரம் உயர்ந்துவிடும் எனச் சொன்ன தனது நண்பன் இப்போது அதே கடையில் ஆட்டு இறைச்சி சாப்பிட்டுகொண்டிருப்பதாகவும் அதுதான் நல்லாட்சியின் மாற்றம் என தனக்கு நூலாசிரியர் சொன்னபோதுதான், தான் தற்போதைய அரசியலை புரிந்துகொள்ளமுடிந்ததாகவும் வியப்படைந்திருக்கின்றார்.
இந்நிகழ்வில் வடமாகாண எதிர்கட்சி தலைவர் தவராசா, எழுத்தாளர் தமிழ்கவி, குகநாதன், யதீந்திரா மற்றும் புதுவிதி ஆசிரியர் பிரபாகரன் மகிழ் வெளியீட்டகத்தின் தயாளன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
தங்களுடைய தேவைகளுக்காக, தங்களுடைய நலன்களுக்காக கொள்கையற்று சோரம் போபவர்கள் இருக்கத்தான் போகின்றார்கள். ஆனால் விழிப்பாக இருக்காதவரை எமக்கான விடிவும் இல்லை.
பச்சைமட்டை கலாச்சாரம் கடந்துவிட்டது. யாரும் எதுவும் செய்யலாம் என்ற நிலை. எனவே விழிப்புணர்வுதான் இத்தகைய ஏமாற்றுப் பேர்வழிகளை தோலுரிக்கும்.
இதுபற்றி சமூக வலைத்தளம் ஒன்றில் பகிரப்பட்ட ஒரு பதிவையும் இங்கு பகிர்ந்து இப்பத்தியை நிறைவுசெய்கின்றோம்.
எட்டு ஆண்டுகளுக்கு மேல் அகதியாக ஏற்கப்பட்டும் தடுப்புமுகாமில் இன்னமும் வாடும் தமிழ் இளைஞர்கள் இருக்கும் நிலையில், தான் அகதி தஞ்சக் கோரிக்கை பெற்ற அதே நாட்டில், தடுப்புமுகாம் அலுவலராக வேலையும் ஏற்று, அதே நாட்டின் தடுப்பு முகாமில் அடைக்கலம் தேடிய அகதிப் பெண்ணுக்கு பாலியல் வக்கிரகம் செய்து, ஒரு மாதம் சிறைத் தண்டனையும் பெற்று, வெளியே வந்தவுடன், தனது பத்திரிகை நண்பர்கள் மூலம் “தமிழரின் எதிர்கால அரசியல் செல்நெறி” எப்படி இருக்க வேண்டும் என – அதுவும் ஜூலை மாதத்தில் – ஒரு புத்தகம் ஒன்றை வெளியிடப்போகின்றாராம்.
இது தான் தமிழர்களின் சாபக்கேடா?
இது சுமந்திரன்களின் காலம்.
அரிச்சந்திரன்
முன்னைய செய்திகள்


அம்பலமானது சிறிதரனின் தொலைபேசி உரையாடல்(காணொளி)ஆலோல்ட்டை அமைச்சராக்க முடியாது -முதலமைச்சர் அதிரடி

சிறிதரனால் பொலீசில் காட்டிக்கொடுக்கப்பட்டவர்கள்(விபரம் உள்ளே)

விக்கியை இப்படியே விட்டால் நிலமை மோசமாகும்-சுமந்திரன்(காணொளி)

கல்வி அமைச்சராக ஆனல்ட் :சுமந்திரன் முடிவு-இணங்குவாரா விக்கி

மைத்திரி வீட்டில் நத்தார் கொண்டாடிய வடமாகாணசபை உறுப்பினர் யார்?

என்னால் உத்தரவாதம் தரமுடியாது-சம்பந்தன் விடாப்பிடி(கடிதம் உள்ளே)

முதலமைச்சரை பதவி நீக்க முற்பட்டால் மாகாண சபை முடக்கப்படும்

முதல்ரிவரின் “வலக்கையை உடைக்க வேண்டும்” சுமந்திரன் போட்ட சதித்திட்டம் அம்பலம்!!

முதலமைச்சரை கருணாவுடன் ஒப்பிடும் சிறிதரன்

இனவழிப்பு நடைபெற்றதற்கான ஆதாரம் இல்லை-சுமந்திரன்(காணொளி)

இலங்கைக்கு எதிராக எந்த தீர்மானமும் வேண்டாம்-சுமந்திரன்(காணொளி)


முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்