Breaking News

சின்ன கதிர்காமரை பாலா அண்ணையுடம் ஒப்பிடும் சிறிதரன்(காணொளி)

சின்னக்கதிர்காமரை தேசத்தின் குரல் பாலா
அண்ணையுடனும் தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட நீலன் திருச்செல்வத்தை ஒரு விண்ணன் என தேசியத் தலைவர் சொன்னதாகவும், உலகக்கோப்பையை இலங்கை வென்றபோது அதனை தேசியத் தலைவர் கொண்டாடியதாகவும் அடுக்கடுக்கான பொய்களை அவிழ்த்து விட்டிருக்கிறார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள்.

இந்த சம்பவம் நேற்று முந்தினம் வடமராட்சி கிழக்கில் STF பாதுகாப்புடன் இடம்பெற்ற கூட்டமொன்றில் பேசும்போதே சிறிதரன் இவ்வாறு சுமந்திரனுக்காக வக்காலத்து வாங்கியிருக்கிறார். சுமந்திரன் எங்களுக்கு வேணும் அவரைப்போல பல சுமந்திரன்க் தேவை எனவும் பொங்கி எழுந்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ள இவ்வவேளையில் மக்கள் முன்னையவை யாவற்றையும் மறந்துவிடுவார்கள் என்ற நினைப்பில் வாயில் வருவதையெல்லாம் பேசுமளவுக்கு நிலமை வந்துள்ளது.



கடந்த தேர்தல்களில் சுமந்திரனுடன் சென்றாலே தனது வாக்கு சரிவை சந்திக்குமென சுமந்திரன் ஒருகூட்டத்தில் சிறிதரனுடன் சென்றவேளை கைநீட்டிய சுமந்திரனின் கையை பற்றிப்பிடிக்காமலே கைகழுவிய சிறிதரன் இப்போது சுமந்திரனுக்காக முழுமூச்சில் செயற்படுவதற்கும் ஒருகாரணம் இருப்பதாகவே உள்வீட்டில் பேசப்படுகிறது.

த.தே.கூட்டமைப்பின் தலைவர் பதவி சுமந்திரன் கைக்கும் தமிழரசின் தலைமைப் பதவி சிறிதரன் கையுக்கும் மாறும் நிலை தொலைவில் இல்லை என்பதாகவும் அதனாலேயே சுமந்திரனின் தயவு தனக்கு கட்டாயம் தேவை என்பதை உணர்ந்தே இவ்வாறு தாறுமாறான பொய்களை சொல்லும் நிலைக்கு சிறிதரன் செயற்படுகின்றார் எனவும் தெரியவருகின்றது.

இதுதொடர்பான செய்தி

வடமராட்சியில் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட அதிர்ச்சி (புகைப்படங்கள்)








விடுதலையை விலைபேசும் சுமந்திரன்-சிறப்பு பார்வை









ஆலோல்ட்டை அமைச்சராக்க முடியாது -முதலமைச்சர் அதிரடி

சிறிதரனால் பொலீசில் காட்டிக்கொடுக்கப்பட்டவர்கள்(விபரம் உள்ளே)

விக்கியை இப்படியே விட்டால் நிலமை மோசமாகும்-சுமந்திரன்(காணொளி)

கல்வி அமைச்சராக ஆனல்ட் :சுமந்திரன் முடிவு-இணங்குவாரா விக்கி

மைத்திரி வீட்டில் நத்தார் கொண்டாடிய வடமாகாணசபை உறுப்பினர் யார்?

என்னால் உத்தரவாதம் தரமுடியாது-சம்பந்தன் விடாப்பிடி(கடிதம் உள்ளே)


முதல்ரிவரின் “வலக்கையை உடைக்க வேண்டும்” சுமந்திரன் போட்ட சதித்திட்டம் அம்பலம்!!

முதலமைச்சரை கருணாவுடன் ஒப்பிடும் சிறிதரன்