மாவைக்காவது முதுகெலும்பு உள்ளதா? சிவகரன் கேள்வி - THAMILKINGDOM மாவைக்காவது முதுகெலும்பு உள்ளதா? சிவகரன் கேள்வி - THAMILKINGDOM
 • Latest News

  மாவைக்காவது முதுகெலும்பு உள்ளதா? சிவகரன் கேள்வி

  வடக்கில் ஒரு கதை தெற்கில் இன்னொரு கதை
  தமிழில் ஒன்று சிங்களத்தில் வேறொன்று என இன விடுதலை அரசியலை வணிகமாக்கி விட்டார்கள் என தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

  அவர் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

  தமிழ் மக்களின் சுவாசமாக இருக்கும் தலைவர் பிரபாகரனிசத்தை எள்ளி நகையாட, கொள்ளிவால் பேயாகவுள்ள சிங்களத்தின் எடுபிடி கைக்கூலி வழிப்போக்கன் சுமந்திரனுக்கு என்ன அருகதையுண்டு என கேள்வியெழுப்பியுள்ளார்.

  சிங்களவர்களோடு சுகபோகத்தை அனுபவித்து விட்டு, சந்தர்ப்பவாதி சம்மந்தனின் கையாளாக உட்புகுந்து முதுகெலும்பில்லாத மாவை சேனாதியாலும் வக்கற்ற பங்காளிக் கட்சிகளாலும் திறனற்ற சக நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் ஒட்டு மொத்த பலவீனத்தின் மொத்த வடிவமே சுமந்திரனின் நிரலான தமிழ்த்தேசிய நீக்கவாதங்கள்.

  பிரபாகரனிசமே புலியிசம் புலியிசவாதத்தின் நீட்சியே இன்றைய தமிழ்த் தேசிய வாதம் வரையறுக்க முடியாத எண்ணிலடங்காத செயற்கரிய செயலாற்றிய விடுதலை வீரர்களை இகழ்ந்துரைக்க எட்டப்பன்களால் எப்படி முடியும்.

  இதற்குப் பின்னும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மக்கள் சுமந்திரனுக்கு வாக்களிப்பார்களானால் அவர்கள் தமிழர்கள் இல்லை. தமிழர் தாயகத்தில் வசிக்க தகுதி அற்ற துரோகிகளாகவே கருதப்படுவார்கள்.

  காலத்திற்கு காலம் சந்தர்ப்பவாதிகளும் போக்கிலிகளும் தமிழ் தரப்பில் தோன்றிய வண்ணமே உள்ளனர்.

  இடத்திற்கு ஏற்ற மாதிரி பச்சோந்தித்தனமாக அங்கிடுதட்டி போல் மாற்றி மாற்றி பேசுவதில் அரசியல் கோமாளி ஆகிவிட்டார்.

  வடக்கில் ஒரு கதை தெற்கில் இன்னொரு கதை தமிழில் ஒன்று சிங்களத்தில் வேறொன்று என இன விடுதலை அரசியலை வணிகமாக்கிவிட்டார்.

  அதுமட்டுல்ல கூட்டமைப்பில் இருந்தும் தமிழரசுக்கட்சியில் இருந்தும், பலர் வெளியேறக் காரணமும் இவரின் தான்றோன்றித்தனமே ஆகும்.

  இதற்கு எல்லாம் எப்போதும் ஆதரவு கொடுக்கும் தமிழ்த்தேசியத்தில் தூய விசுவாசமற்ற சம்மந்தனின் ஆசீர்வாதமே ஆகும்.

  சுமந்திரனின் தறி கெட்ட ஆணவ சதிராட்டம் விரைவில் முடிவுக்கு வரும் ஊழ்வினை உறுதி வந்தூட்டுகிறது அறம் ஒரு போதும் அகன்று போக விடாது என்பதை இவர் விரைவில் உணர்வார்.

  சுமந்திரன் பல வருடங்களாகவே புலி நீக்க அரசியல் செய்து வருகிறார். இவ்வளவு நாளும் வேடிக்கை பார்த்த ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது சினங் கொள்வது தேர்தல் காச்சலே மாவைக்கு கூட முதுகெலும்பு வந்துவிட்டதோ என தற்போது எண்ண தோன்றுகின்றது. எல்லாம் அரசியல் நாடகமே.

  ரணிலோடு தமிழ்த்தேசிய நீக்கத்தில் ஈடுபட்டு சிங்களவரை விசுவாசப்படுத்தியவர். தற்போது மகிந்த ஆட்சியோடு இணைந்து மீதமாக உள்ளவற்றையும் அழிப்பார் என்பதே சர்வ நிச்சயம்.

  மக்களுக்காக கட்சியா? கட்சிக்காக மக்களா? விடுதலைக்காக மக்களா? மக்களுக்காக விடுதலையா? என்பதை புரிந்து கொள்ள வேண்டும் கூட்டமைப்பு.

  சுமந்திரனின் அடாவடித்தனத்தை தமிழரசுக்கட்சியோ, கூட்டமைப்போ ஒரு போதும் கட்டுப்படுத்தாது.

  எல்லோரும் கூட்டுக்கள்ளர்கள் சுமந்திரனில் இவர்கள் எல்லாம் தங்கி வாழ்பவர்கள் அடிமைகளிடம் நீதியை எதிர் பார்க்க முடியுமா?

  ஆதாயச்சூதாடிகளை வீட்டிற்கு அனுப்ப, வரும் தேர்தலில் அரசியல் பாடம் புகட்டுங்கள். இல்லா விட்டால் இவர்களை அகற்றவே முடியாது மக்கள் மன்றிலே நீதியின் செங்கோல் செய்வீர்களா? என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  தொடர்புடைய முன்னைய செய்திகள்

  விடுதலையை விலைபேசும் சுமந்திரன்-சிறப்பு பார்வை
  ஆலோல்ட்டை அமைச்சராக்க முடியாது -முதலமைச்சர் அதிரடி

  சிறிதரனால் பொலீசில் காட்டிக்கொடுக்கப்பட்டவர்கள்(விபரம் உள்ளே)

  விக்கியை இப்படியே விட்டால் நிலமை மோசமாகும்-சுமந்திரன்(காணொளி)

  கல்வி அமைச்சராக ஆனல்ட் :சுமந்திரன் முடிவு-இணங்குவாரா விக்கி

  மைத்திரி வீட்டில் நத்தார் கொண்டாடிய வடமாகாணசபை உறுப்பினர் யார்?

  என்னால் உத்தரவாதம் தரமுடியாது-சம்பந்தன் விடாப்பிடி(கடிதம் உள்ளே)


  முதல்ரிவரின் “வலக்கையை உடைக்க வேண்டும்” சுமந்திரன் போட்ட சதித்திட்டம் அம்பலம்!!

  முதலமைச்சரை கருணாவுடன் ஒப்பிடும் சிறிதரன்


  முதலமைச்சரையும் வீட்டுக்கு அனுப்புவோம் மாவை முழக்கம்


  முதலமைச்சர் கட்சியிலிருந்து நீக்கம் ? -சின்ன கதிர்காமர்(காணொளி)

  உண்மையில் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டியவர் யார்? துரோகி 

  சுமந்திரனே வெளியேறு! அவுஸ்திரேலியாவிலும் மூக்குடைபட்டார் சுமந்திரன்!(காணொளி)

  இனவழிப்பு நடைபெற்றதற்கான ஆதாரம் இல்லை-சுமந்திரன்(காணொளி)  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: மாவைக்காவது முதுகெலும்பு உள்ளதா? சிவகரன் கேள்வி Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top