அடுத்த அரசில் அமைச்சர் பதவி ஆணை தாருங்கள் என்கிறார் சுமந்திரன்(காணொளி) - THAMILKINGDOM அடுத்த அரசில் அமைச்சர் பதவி ஆணை தாருங்கள் என்கிறார் சுமந்திரன்(காணொளி) - THAMILKINGDOM

 • Latest News

  அடுத்த அரசில் அமைச்சர் பதவி ஆணை தாருங்கள் என்கிறார் சுமந்திரன்(காணொளி)

  அபிவிருத்திக்காக புதிய ஆட்சியில் அமைச்சவையில்
  சேர்வதாக இருந்தாலும் எந்த அமைச்சுக்கள், எத்தன அமைச்சுக்கள், என்னவிதமான அதிகாரங்கள் என்பவற்றை பேரம் பேச எமக்கு பலம் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் எம்.ஏ.சுமந்திரன்.

  யாழ்ப்பாணம் செம்பியன்பற்றில் இன்று காலை நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இதனை தெரிவித்தார்.

  அவர் மேலும் தெரிவிக்கையில்,

  காங்கேசன்றை சீமெந்து தொழிற்சாலை, பரந்தன் இரசாயன தொழிற்சாலை, வாழைச்சேனை காகித தொழிற்சாலை என்பன ஜீ.ஜீ.பொன்னம்பலம் அமைச்சராக பதவிவகித்த காலப்பகுதியில் அமைக்கப்பட்டன. பின்னர் அவர் அமைச்சு பதவியை துறந்தபோது, பெரும்பான்மை இனத்தவருடன் இணங்கி செயற்படுவதில் நம்பி இறங்கியது தவறென்பது எனக்கு தெரிகிறது. அதனால் நான் அமைச்சு பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

  1952 ஆம் ஆண்டு தேர்தலில் அவரது கட்சி முதன்மை கட்சியாக வெற்றிபெற்றது. தமிழ் அரசு கட்சிக்கு 2 ஆசனங்கள்தான் கிடைத்தன. ஆனால் அதற்கு பிறகு நடந்த எல்லா தேர்தல்களிலும் தமிழ் அரசு கட்சி முதன்மையான இடத்தை பெற்றது. அதற்கு பின்னர் நடந்தஎல்லா தேர்தல்களிலும் இலங்கை தமிழ் அரசு கட்சி முதன்மையானதாக வெற்றியீட்டியது. ஆட்சியதிகாரம் பிரதேசவாரியாக, சமஷ்டி கட்டமைப்பின் கீழ் பகிரப்பட வேண்டுமென சொல்லி வருகிறது. 1956ஆம் ஆண்டியிலிருந்து மக்களின் ஆதரவு அதற்கு இருந்து வருகிறது. இன்று வரை சமஷ்டி என்ற ஆட்சிமுறைக்கு குறைவாக வாக்களித்ததில்லை. ஒருமுறை தனிாட்டுக்கும் வாக்களித்தனர்.  முழுமையான காணொளி


  எங்கள் மக்களின் எதிர்பார்ப்பு- அரசியல் உரித்துக்களை நாம் பெற வேண்டும். எமது உரித்துக்களை பெற்றால் பொருளாதார விடயங்களை நாமே கையாளலாம் என்பதாகவே இருந்தது.

  இந்த போக்கிலே ஒரு மாற்றம் ஏற்பட்டிருப்பதை காண முடிகிறது. நான் போகும் கூட்டங்களில் இளைஞர்கள் நேரடியாக இந்தக் கேள்வியை கேட்கிறார்கள்.

  சென்றதடவை நாங்கள் இருந்த அரசாங்கத்தை கவிழ்த்து, 2015இல் புதிய அரசொன்றை அமைத்தபோது நாம் உறுதுணையாக இருந்தோம். இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கான சந்தர்ப்பமிருந்ததால் அரசாங்கத்தை ஆதரித்தோம். அந்த தேர்தலின் போதும் இந்த கேள்வி எழுப்பப்பட்டது. அமைச்சரவையில் சேர வேண்டுமென சொல்லப்படவில்லை. சேருவீர்களா என கேட்கப்பட்டது.

  நாங்கள் சேரவில்லை. ஏனெனில் அரசியல் தீர்வொன்றை பேச்சின் மூலம் பெறுவதற்கு, எமது பேரம் பேசும் சக்திக்கு இது தடையாக இருந்துவிடும் என்பதால் நாம் அமைச்சரவையில் சேரவில்லை. அரசில் இணைந்தால் கூட்டுப்பொறுப்பு உள்ளது. அரசின் எல்லா முடிவிற்கும் நாமும் பொறுப்பாளிகள்.

  தற்போது ஆட்சி ராஜபக்ச குடும்பத்தின் கைக்கு சென்றுள்ளது. அவர்களின் அரசியல் அணுகுமுறைகள் எப்படியானதென எல்லோருக்கும் தெரிகிறது. இந்த அரசில் ஒரு கூட்டுப்பொறுப்புடன் அமைச்சரவையில் இணையலாமா என்கிற கேள்வியுண்டு.

  என்னைப் பொறுத்தவரை கடந்த அரசில் அமைச்சரவை பொறுப்புக்களை ஏற்றிருந்தால், இன்னும் கூடுதலான நிதிகளை பெற்றிருக்கலாம். அரசியல் தீர்வொன்று எற்படுவதில் உள்ள தாமதம், மக்களின் நாளாந்த வாழ்க்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பொருளாதார ரீதியாக நாம் வலுப்பட வேண்டும். இல்லாவிட்டால் இன்னும் நலிவடைந்து விடுவோம்.

  வள்ச்சியை நாம் அடையாவிட்டால், வாழ்வாதாரம், வேலைவாய்ப்பில்லையென்றால் வெளிநாட்டுக்கு செல்வதையே இளைஞர்கள் ஒரேயொர தெரிவாக வைத்துள்ளனர். அப்படி வெளிநாடு சென்றால் குடும்பங்கள், சமூகங்களின் வாழ்வாதாரம் ஓரளவு விருத்தியடையும். அதன் மூலம் எமது பொருளாதாரம் வெளிநாட்டிலிருந்து வரும் பணத்தின் மூலம், இப்பொழுது உள்ளதை போல ஓரளவு விருத்தியடையும். ஆனால் தீர்வென்பது இடம்பெறாமலே போய்விடும். எமது எண்ணிக்கையில் குறைவடைந்தால், தேசிய இனப்பிரச்சனை இருப்பதாகவே சொல்ல முடிாமல் போய்விடும். இந்த இரண்டுக்கும் இடையிலேயே நாம்இப்பொழுது சிக்கியுள்ளோம்.

  இந்த அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்ம தேவை, இதுவரை ஏற்படுத்தப்பட்ட எல்லாவித ஜனாநாயக சீர்திருத்தங்களை மாற்றுவதாக தெரிவித்துள்ளனர். அப்படியான செயற்பாட்டிற்கு நாம் உடந்தையாக இருக்க முடியாது. சுயாதீன ஆணைக்குழுக்கள் கலைக்கப்பட்டு, முன்னர் இருந்ததை விட அதிகமான அதிகாரம் தனிநபரின் கைகளிற்கு செல்லும். இது முழு நாட்டுக்கும்- குறிப்பாக தமிழ் மக்களிற்கு கூடுதல் பாதகமாக இருக்கும்.

  ஆகவே, அரசுக்கு ஆதரவு கொடுப்பதா இல்லையா, சேர்வதா இல்லையா என்ற தீர்மானங்கள் எடுக்கும்போது, அபிவிருத்தி என்கிற ஒரு விடயத்தை மையமாக வைத்து தீர்மானம் எடுக்க முடியாமல் உள்ளது. நாம் எல்லா விடயங்களையும் ஆராய்ந்துதான் முடிவெடுப்போம்.

  இந்த அரசுக்கு தேவை மூன்றில் இரண்டு பெரும்பான்மை. ஆனால் அவர்கள் அதை பெற மாட்டார்கள் என்பதுதான் அரசியல் நோக்கர்களின் கணிப்பு. இப்படியான நிலைமையில் எங்களது ஆதரவு அவர்களிற்கு தேவைப்படலாம்.

  அது தேவைப்பட்டால் எந்த அடிப்படையில், நிபந்தனையில் அரசாங்கத்துடன் இணையலாமென்பது பற்றி நான் ஏற்கனவெ சொல்லியுள்ளேன். அதை சொன்னதும் அரச தரப்பிலிருந்தும் நல்ல சமிக்ஞைகளை வெளியிட்டுள்ளனர். ஆனால் நான் அதை சொன்ன கணமே தவறாக அர்த்தப்படுத்தப்பட்டு வெளிப்படுத்தப்படுகிறது.

  அரசியலமைப்பு சீர்திருத்த்தத்திற்காகவே மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்படுகிறது. புதிய அரசியலமைப்பை உருவாக்கவதற்காக. புதிய அரசியலமைப்பு தேவையென முனைப்பாக வேண்டி நிற்பவர்கள் நாங்கள். அதனால், புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்பம் வரும்போது, அதை நிறைவேற்ற நாம் அரசுடன் பேச்சு நடத்தலாம். எமது அரசியல் அபிலாசைகள் நிறைவேறும் பட்சத்தில் சிந்திப்போம் என சொல்லியுள்ளேன். 

  அது இப்பொழுது நடக்குமா நடக்காதா என்பதை இப்பொழுது சொல்ல முடியாது தேர்தல் முடிய வேண்டும் முதலில். ஆசன எண்ணிக்கையை தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பின்னரும் ஒரு பேரம் பேசும் படலம் இருக்கும். அதில் என்ன முடிவெடுக்கப்படும் என தற்போதைக்கு சொல்ல முடியாது.

  வெறுமனே நாங்கள் அரசாங்கத்தில் இணைகிறோம், அமைச்சர் பதவியை ஏற்கிறோம் என தீர்மானங்களை எடுக்க முடியாது. ஆனால், இதையெல்லாம் சொல்வதால், நாங்கள் ஒரு போதும் அதை செய்ய மாட்டோம் என சொல்லவில்லை. அதற்கான சந்தர்ப்ப சூழ்நிலைகள் சேர்ந்து வர வேண்டும்.

  சென்ற ஆட்சிக்காலத்தில் நாம் அமைச்சரவையில் இல்லாவிட்டாலும், அமைசசரவையில் இருந்தவர்களை விட அதிக அபிவிருத்திகளை செய்ய முடிந்தது. சஜித் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், வடக்கு கிழக்கில் அதிகமான நிதியை வழங்கியதாலேயே தெற்கு அவரை நிராகரித்ததாக சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.

  அது உண்மை. வடக்கிற்கு எவ்வளவு நிதி வந்ததென எமக்கு தெரியும். ஆனால் தெற்கிற்கு சென்ற நிதி பற்றி எமக்கு தெரியாது. கடந்த அரசில் மிகப்பிரமாண்டமான அளவில் வடக்கு, கிழக்கிற்கு அதிக நிதி வந்தது உண்மை.

  அபிவிருத்திக்காக நாங்கள் செயற்பட வேண்டுமென்பதை முற்றுமுழுதாக நான் இணங்குகிறேன். அரசில் தீர்வொன்று எப்பொழுது வருமென சொல்ல முடியாது. ஜனநாயக சூழலில் காத்திருந்த பேச்சுவார்த்தை மூலம்தான் பெற முடியும். போர்ச்சூழல் என்றால் அடித்து பறிக்கலாம். இது அப்படியல்ல. பேசி இணங்கப்பண்ணி எடுக்கின்ற முறை. ஆகவே அதற்கு எவ்வளவு காலம் எடுக்குமென சொல்ல முடியாது. அந்த இடைப்பட்ட காலத்தில் நாங்கள் எமது பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்வது அத்தியாவசிய தேவை.

  அரசாங்கத்துடன் இணைவதா இல்லையா என்ற தீர்மானம் பின்னர் எடுக்கப்படுவதாக இருந்தாலும், எற்கனவே சில தீர்மானங்களை எடுத்து நடைமுறைப்படுத்துகிறோம். வடக்கு கிழக்கிற்கான மாற்று பொருளாதார நிறுவனமொன்றை ஏற்படுத்தம் முன்னெடுப்புக்கள் செய்யப்பட்டுள்ளன. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் உதவியுடன் நமது பாரம்பரிய வாழ்வாதார தொழில்களை நவீனப்படுத்தும் ஒரு முறையையும், புதிதாக தொழில்நுட்பரீதியில் நவீன உலகில் வேலைவாய்ப்புக்களை அதிகரிப்பது, உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்களையும் வகுக்க வேண்டும்.

  அரசின் உதவியை கூட எதிர்பார்க்காமல் நாங்களாகவே ஒரு பொருளாதார திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம். தேர்தலின் பின்னர் அது இயங்க தொடங்கும். அதன் முழுமையான பிரதிபலனை பெற ஓரிரு வருடங்கள் ஆகும்.

  இவையெல்லாம் சாத்தியமாக தேர்தல் முடிவுகள் முக்கியமானவை. அமைச்சவையில் சேர்வதாக இருந்தாலும் எந்த அமைச்சுக்கள், எத்தன அமைச்சுக்கள், என்னவிதமான அதிகாரங்கள் என்பவற்றை பேரம் பேச எமக்கு பலம் இருக்க வேண்டும். அல்லது வெளியே இருந்தாலும் கூட, இத்தனை எண்ணிக்கையான பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களின் வாக்களிப்பு அரசாங்கத்திற்கு தேவையாக இருக்கும் போது அந்த பேரம் பேசலை செய்யலாம்.

  எப்படியான பாத்திரத்தை நாங்கள் வகிக்கப் போகிறோம் என்பது இப்பொழுது தெரியாவிட்டாலும், எங்களிற்கு தெரிந்த ஒன்று, நாங்கள் பலமான ஒரு அணியாக பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும் என்றார்.

  இது நேற்றைய காலைக்கதிர் செய்தி


  இது தொடர்பான முன்னய செய்தி  75 கள்ள வாக்குகள் போட்டேன் -சிறிதரன் அதிரடி(காணொளி)

  விடுதலையை விலைபேசும் சுமந்திரன்-சிறப்பு பார்வை

  ஆலோல்ட்டை அமைச்சராக்க முடியாது -முதலமைச்சர் அதிரடி

  சிறிதரனால் பொலீசில் காட்டிக்கொடுக்கப்பட்டவர்கள்(விபரம் உள்ளே)

  விக்கியை இப்படியே விட்டால் நிலமை மோசமாகும்-சுமந்திரன்(காணொளி)

  கல்வி அமைச்சராக ஆனல்ட் :சுமந்திரன் முடிவு-இணங்குவாரா விக்கி

  மைத்திரி வீட்டில் நத்தார் கொண்டாடிய வடமாகாணசபை உறுப்பினர் யார்?

  என்னால் உத்தரவாதம் தரமுடியாது-சம்பந்தன் விடாப்பிடி(கடிதம் உள்ளே)


  முதல்ரிவரின் “வலக்கையை உடைக்க வேண்டும்” சுமந்திரன் போட்ட சதித்திட்டம் அம்பலம்!!

  முதலமைச்சரை கருணாவுடன் ஒப்பிடும் சிறிதரன்

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: அடுத்த அரசில் அமைச்சர் பதவி ஆணை தாருங்கள் என்கிறார் சுமந்திரன்(காணொளி) Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top